கொழும்பு, தெமட்டகொடை சிரிதம்ம மாவத்தையில் வைத்து 4 "T-Katas" வகை துப்பாக்கிகளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் மேல் மாகாண வட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது, இந்த துப்பாக்கிகள் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 'தெமட்டகொடை சமிந்த' என்பவரின் மகனான 'மலிஷ' என்பவருக்குச் சொந்தமானவை என தெரியவந்துள்ளது.
மேல் மாகாண வட குற்றப் பிரிவின் பணிப்பாளரின் வழிகாட்டலில், பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
