கல்பிட்டி பாலக்குடா பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண், கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கற்பிட்டி, பாலக்குடாப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார்.
உயிரிழந்த பெண் தனது கணவனைப் பிரிந்து மற்றுமொரு நபருடன் வசித்து வந்ததாகவும், குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாகவே குறித்த நபரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
