24 வருட காத்திருப்புக்கு முடிவு: பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 

கடந்த 24 வருடங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) உள்ளிட்ட சலுகைக் கொடுப்பனவுகள் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனை குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய அவர், கடந்த 24 ஆண்டுகளாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்த சட்டப்பூர்வ நிதியுதவிகளை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்தைத் தொடர்ந்து, நேற்று  4,507 மில்லியன் ரூபாய் தொகை பெருந்தோட்ட மக்களுக்கு உரிமையாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் இந்த அரசாங்கம் வெற்றிகரமாக உறுதிசெய்து வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டினார்.

Post a Comment