தமிழர் பகுதி கிராமம் ஒன்றை உலுக்கிய சோகம்-சம்பவ இடத்திலே 22 வயது இளைஞன் பலி

 

சந்திவெளியில் கோர விபத்து: இரவுப் பணியை முடித்துவிட்டு ஆலயக் கும்பாபிஷேகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞன் பரிதாப சாவு! 

மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் இன்று (9) காலை இடம்பெற்ற கோர விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயதான இளம்  இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், தனது ஊரில் உள்ள ஆலயம் ஒன்றில் இன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக இரவுப் பணியை முடித்துவிட்டு காலையில் மோட்டார் சைக்கிளில் ஊர் நோக்கிப் பயணித்துள்ளார்.

அவர் சந்திவெளிப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்துடன் அவரது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தின் கோரத் தாக்கத்தால் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மகிழ்ச்சியாகக் கும்பாபிஷேக வழிபாடுகளில் கலந்துகொள்ளவேண்டிய ஒரு இளம் உயிர், அதிகாலைப் பொழுதில் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி கிரான்குளம் கிராமத்தையே கண்ணீரில்
ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் குறித்து சந்திவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.






Post a Comment