கிளிநொச்சியை சோகமாக்கிய 22 வயது இளைஞனின் உயிரிழப்பு

 

கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பனை மரத்துடன் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று(03.09.2026) இடம்பெற்றுள்ளது. 

அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதுண்ட நிலையில் படுகாயம் அடைந்து இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிளிநொச்சி - உதய நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராசா சமர்நிலவன் எனும் 22 வயதுடைய இளைஞன் என அடையாளங்காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment