22 இற்கு நடந்தது என்ன?

 



நீதிமன்ற அமைப்புக் கட்டளைச்சட்டத் திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

நீதிமன்ற அமைப்புக் கட்டளைச்சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு (25) நாடாளுமன்றத்தில் திருத்தங்களின்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, நீதிமன்ற அமைப்புக் கட்டளைச்சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களின்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


Post a Comment