இன்று 18 செப்டம்பர் 2026, புரட்டாசி 1, வெள்ளிக் கிழமை, சப்தமி திதி, இன்று சந்திர பகவான் விருச்சிக ராசியின் கேட்டை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று மரண யோகம் உள்ள தினத்தில் மேஷ ராசியை சேர்ந்த பரணி நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். இன்று மாளவ்ய யோகம், கூடிய தினத்தில் 12 ராசிகளுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். இன்று புரட்டாசி மாதம் பிறக்கிறது.
மேஷ ராசி பலன்
மேஷ ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுடைய பயணங்கள், பண பரிவர்த்தனை, முக்கிய முடிவுகள் எடுப்பது, முதலீடு செய்வது தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். உங்களுடைய முயற்சிகளையும் திட்டங்களையும் அதிகரிப்பது நம்மை தரும். நீங்கள் அரசு தொடர்பான சிறப்பு கௌரவம் கிடைக்கலாம். பொருள் சார்ந்த விஷயத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். மாலை நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். சுப காரியங்களுக்காக நீங்கள் செய்யக் கூடிய செலவுகள் சமூகத்தில் உங்களுக்கான நற்பெயரை உயர்த்தும்.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இன்று புதிய திட்டங்களுடன் செயல்படுவது, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது போன்ற முயற்சிகள் சாதகமான பலனை தரும். புனித தலங்களுக்கு செல்வது உங்களுடைய மன அமைதியை மேம்படுத்தும். சட்டப் பிரச்சனைகளில் வெற்றி கிடைக்கும். இன்று வேலை அல்லது வீடு தொடர்பான இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை, குடும்ப பொறுப்புகள் தொடர்பாக சில சிக்கல் இருந்தாலும் அதை எங்கள் தைரியத்தால் சமாளிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மற்றும் சுபமான நல்ல மாற்றங்கள் நிகழும். உங்களுடைய விருப்பங்கள் நிறைவேற கூடிய. பணியிட சூழல் மேம்படும்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி சேர்ந்த நண்பர்களுக்கு ஆக்கபூர்வமான அமையும். படைப்பாளர்களை துறையில் இருக்க கூடிய நபர்களுக்கு சில ஒப்பந்தங்கள் அல்லது மனதிற்கு பிடித்த வேலை செய்வீர்கள். இதன் காரணமாக உங்கள் மன அமைதி மேம்படும். நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது தொழில் தொடர்பாக அதை மேம்படுத்த விதமாக புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு பெற முயலவும். இன்று மாணவர்களுக்கு தங்களுடைய படிப்பு அல்லது விரும்பிய வேலை தொடர்பான நல்ல வழி கிடைக்கும்.
கடக ராசி பலன்
கடக ராசி நண்பர்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக அமையும். உங்களுடைய அர்பணிப்புடன் கூடிய எந்த ஒரு செயலும் உடனடியான பலனை தரக்கூடியதாக அமையும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாத பணிகள் நிறைவடைய வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்கள் வேலை திட்டம் தொடர்பான விவாதங்கள் நல்ல தீர்வு தரும். சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று சில விசேஷ நிகழ்சிகளில் கலந்து கொள்வீர்கள். பரபரப்பான வேலை அட்டவணைக்கு இடையே உங்கள் துணையுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். ஆன்மீக பணி மற்றும் சமூகப்பணிகள் தொடர்பாக ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் உங்களுடைய உயர் அதிகாரிகள் உங்கள் பணிக்கு சில தடை ஏற்படுத்த முயலலாம். இன்று உங்களுடைய வேலையை முடிப்பதில் நிதானமாக புதிய திட்டங்களுடன் செயல்படுவது நன்மை தரும். இன்று சூரியனுடைய பெயர்ச்சி சில சங்கடங்களை தரலாம். உங்களுடைய உறவில் கருத்து வேறுபாடுகளை தவிர்த்தால், உறவில் நெருக்கம் மற்றும் காதல் அதிகரிக்கும். விநாயகர் பெருமானை வணங்கி எந்த ஒரு செயலையும் தொடங்குவது நன்மை தரும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு சற்று பரபரப்பான நாளாக அமையும். ஆன்மீகத்தின் மீதான ஆட்டோ மதிப்பிற்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு அந்த வேலையில் உள்ள தடைகளை தாண்டி முன்னேற உதவும். இன்று பிறரிடம் பழகும் போது நிதானத்தையும், எச்சரிக்கையையும் கடைப்பிடிக்கவும். இன்று உங்களுடைய வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். இன்று விதி போன போக்கில் செயல்படுவதை விட, புதிய திட்டங்களுடன் முயற்சி செய்து பார்ப்பது நன்மை தரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்த நண்பர்களுக்கு பல விதத்தில் நன்மை கிடைக்கக்கூடிய நாள் உங்களுடைய வேலை தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். புதிய திட்டங்களுடன் நீங்கள் பணி செய்தால் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். உங்களுடைய குடும்பம் மற்றும் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். குறிப்பாக சொத்து தொடர்பான சில சிக்கல்கள் உருவாகலாம்.இன்று உங்கள் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை சிறப்பாக எதிர் கொண்டு வெற்றி பெற முடியும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு நிதி நிலை தொடர்பான முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். மேலும் உங்களுக்கு சில லாபகரமான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வேலை, தொழில் தொடர்பாக மிகவும் கவனத்துடன் செயல்படுவது தன வரவை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள், வங்கி சார்ந்த பணிகளில் வெற்றியை காண்பீர்கள். இன்று உங்களுடைய குடும்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவும். உங்கள் வேலை அழுது தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், மேற்கொள்வது எதிர்காலத்தில் நன்மைகளை அதிகரிக்கும். உங்களுடைய பணி சூழலில் புத்துணர்ச்சி ஏற்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியை சேர்ந்தவர்கள் இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள். தொழிலில் சிறிய அளவில் நீங்கள் எடுக்கக்கூடிய ரிஸ்க் கணிசமான லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இன்று உங்களுடைய வழக்கமான செயல்பாடுகள் தாண்டி புதிதாக ஏதேனும் செய்ய முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுக்கு பிடித்த சில நபர்களுக்காக பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். காதல் தொடர்பான சில மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.உங்களுடைய அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு பெரிய அளவில் கை கொடுக்கும்.
மகர ராசி பலன்
மகர ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று ஓரளவு சாதகமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று வேலை தொடர்பான திட்டமிடலால் வேலையை வேகமாக முடிக்க முடியும். புதிய வேலைக்கான முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் பிள்ளைகள் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும். இன்று நேர்மையை கடைப்பிடிப்பதோடு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றவும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய சூழலால் பதற்றம் அதிகரிக்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் நலனில் கவனம் தேவைப்படும். வானிலை மாற்றங்களால் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணவு பழக்கத்தில் கவனக் குறைவாக இருப்பதை தவிர்க்கவும். இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் சூழல் சாதகமாக அமையும். இன்று அவசரப்படுவதை தவிர்த்து நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான மற்றும் நெருக்கமாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்த நண்பர்களுக்கு லாபகரமான நாலாக இருக்கும். தொழில் தொடர்பாக ரிஸ்க் எடுப்பதில் சாதகமாக முடிவுகள் கிடைக்கும். இன்று பொறுமை மற்றும் கனிவான அணுகுமுறை எந்தவித கடினமான சூழலில் தாண்டி பிரச்சனைகளை தீர்க்க உதவும். உங்களுடைய புத்திசாலித்தனமான அணுகுமுறை நீண்ட காலமாக தடைப்பட்டு வந்த வேலையை முடிக்க அல்லது உங்களுக்கு கிடைக்க வேண்டிய விஷயங்களை அடையலாம். இன்று மன அழுத்தம் மற்றும் கஷ்டத்தில் இருந்து மீள்வீர்கள்.இன்று ஒரு நல்ல நாளாக அமையும்.
