18 வயது இளைஞன் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

 

திவுல்வௌ - வாலிகொல்லாவ பாதையில், ரம்பவல குளக்கட்டின் மீது பயணித்த உழவு இயந்திரம்; கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளக்கட்டில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று குறுக்கே வந்தமையினால் அதன் மீது மோதுவதை தவிர்ப்பதற்கு முயற்சித்தபோது, உழவு இயந்திரம குளத்திற்குள் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திரத்டதின்; சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் கஹட்டகஸ்திகிலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் வாலிகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து திவுல்பவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment