இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை! 16 ஓட்டங்களால் அபார வெற்றி – தொடர் 1-1

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின், லோர்ட்ஸில் நேற்றிரவு (24) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றுள்ளது.  

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 1-1 என சமநிலைப்படுத்தியுள்ளது.   

322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.   

இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் 100 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 121 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.   

இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள்   (பெத்;தும் நிஸ்ஸங்க 25, கமிந்து மெண்டிஸ் 54, குசல் மெண்டிஸ் 121, பவன் ரத்நாயக்க 48, ஜனித் லியனகே 32, துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காமல் 16; ஓட்டங்கள் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் கஸ் அட்கின்சன் 55 ஓட்டங்களுக்கு 2, ரெஹான் அகமட் 48ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்கள்   இங்கிலாந்து அணி: 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்கள்   (டொம் பாண்டன் 73, பென் டக்கெட் 67, ஜோஸ் பட்லர் 69, வில் ஜேக்ஸ் 52; பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 54 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்கள், எஷான் மாலிங்க 50 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்கள், துனித் வெல்லாலகே 49ஓட்டங்களுக்கு3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்)

Post a Comment