தரம் 1-க்காக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும், தரம் 2 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
புதிய திட்டத்தின் கீழ்:
தரம் 6 சீர்திருத்தங்கள்: 2026 ஆம் ஆண்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டதரம் 6-க்கான கல்விச் சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
தரம் 1 மற்றும் 2: இந்த ஆண்டு தரம் 1-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் தொடர்வதுடன், 2027 ஆம் ஆண்டின் மூன்று தவணைகளுக்குமான தரம் 1 மற்றும் 2 பாடப்புத்தகங்கள் (செயற்பாட்டுப் புத்தகங்கள்) மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகள் அச்சிடத் தயாராக உள்ளன.
ஆசிரியர் பயிற்சிகள்: தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) முதன்மைப் பயிற்றுநர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை அடிப்படையிலான மதிப்பீடுகள் (School-based assessment) தொடர்பான புதிய கொள்கை வழிகாட்டுதலும் இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2026 இல் தரம் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு ஒரே நேரத்தில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தரம் 1-க்கான சீர்திருத்தங்களை இந்த ஆண்டும், தரம் 6-க்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
