SLCERT எச்சரிக்கை: Facebook, WhatsApp மூலம் 'Sextortion' மோசடி - இந்தியாவில் இருந்து இயக்கம்

 

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஐ பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் SLCERT விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த மோசடி இந்தியாவிலிருந்தே இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

*மோசடி முறை:*  

முதலில் Instagram இல் அழகான பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து 'Hi' செய்தி வரும். பதிலளிப்பவர்களை சில நாட்கள் கண்காணித்து பின் மீண்டும் உரையாடல் தொடங்கும்.

பின்னர் அரைகுறை ஆடை/நிர்வாண படங்களை அனுப்பி, மறுமுனையிலும் அதே போல் அனுப்புமாறு அல்லது WhatsApp வீடியோ கால் செய்யுமாறு தூண்டுகின்றனர்.

அந்த காட்சிகளை இரகசியமாக பதிவு செய்து, இலக்கின் உறவினர்கள், நண்பர்கள் பட்டியலுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் கேட்கின்றனர். இலக்குகளை வீழ்த்த முன் அவர்களின் குடும்பத்தினரையும் நண்பர்களாக சேர்துக்கொள்கின்றனர்.

*SLCERT அறிவுரை:* அடையாளம் தெரியாத கணக்குகள், நண்பர் கோரிக்கைகள், குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்கவும்.



Post a Comment