வவுனியாவில் பிக் மி முச்சக்கர வண்டி சாரதிகளை ஏனைய முச்சக்கர வண்டி சாரதிகள் அச்சுறுத்தும் சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிக் மி முச்சக்கர வண்டி சாரதிகள் ஏனைய முச்சக்கர வண்டி சாரதிகளின் கட்டணங்களை விட குறைத்த கட்டத்திற்கு செல்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனால் தமது வருமானம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் சுயாதீன வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் ஏழைகளால் அவசர நிலைமையிலும் அதிக கட்டணம் செலுத்தி முச்சக்கர வண்டியில் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுயாதீன வாடகை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் செலவை ஒரு பங்கு அதிகமான கட்டணத்தை அறவிடுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஆகையினால் பிக் மி முச்சக்கர வண்டி போன்ற ஒன்லைன் ஒதுக்கீட்டு முச்சக்கர வண்டிகள் பாதுகாப்பானது மாத்திமின்றி சாதாரண கட்டணத்தில் செல்ல முடியும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
