இலங்கைக்கு ஆபத்து இல்லை - இலங்கை நடுங்காது எனவும் அறிவிப்பு

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்திரா மற்றும் கிழக்குப் பகுதிகளில் நேற்றைய தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை அடுத்து, இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் வட சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரான மேடனுக்கு அருகில், சனிக்கிழமை பிற்பகல் 04.24 மணியளவில் (இலங்கை நேரப்படி) 168 கி.மீ ஆழத்தில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், மேற்கண்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு தற்போது சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனவே, இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பானவை என அறிவிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்புடைய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment