அதிர்ந்தது வல்லாதிக்கம்-அறுவர் பலி

 

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் வசிப்பவர்களை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக மிச்சிகன் காவல்துறை விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், பின்னர் துப்பாக்கி ரவைகள் துளைத்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment