கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி நகரப் பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையால் நகரின் பல வீதிகளில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ளன.
கடந்த சில நாட்களாகவே நாவலப்பிட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடரும் மழையினால் வெள்ளநீர் தேங்கும் சம்பவங்கள் பதிவாகிய வண்ணம் உள்ளன.
அடிக்கடி மகாவலி கங்கை பெருக்கெடுப்பதாலும், அப்பகுதியில் இரண்டு காட்டாறுகள் ஒன்றாக சங்கமிப்பதாலும் தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் மகாவலி கங்கையை அண்மித்துள்ள அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் இஸ்லாமியப் பாடசாலை ஆகியவை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
