கூச்சலிட்டு வியப்பில் உரைந்த மக்கள் நேற்றிரவு நடந்த அதிசயம்

 

சுமார் 30 ஆண்டுகளின் பின்னர், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அரிய சூரிய கிரகணத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து அவதானித்த மக்களுக்கு பகுதி சூரிய கிரகணம் கண்ணுக்கு விருந்தளித்தது. 

இது பிரித்தானிய நேரப்படி இரவு 7:00 மணிக்கு பின்னர் கிரகணம் அதன் உச்சக் கட்டத்தை அடைந்தது. 

அப்போது பல பகுதிகளில் சூரியனில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி சந்திரனால் மறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எப்படியிருப்பினும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணத்தை அனுபவிக்க முடிந்தது. 

அந்த வேளையில் பகல் நேரத்திலும் கூட அப்பகுதிகள் முழுமையான இருளில் மூழ்கியது ஒரு சிறப்பான காட்சியாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வானியலாளர்கள் கூறுகையில், இத்தகைய அரிய சூரிய கிரகணம் மூலம் பிரபஞ்சத்தின் மகத்துவமும் இயற்கையின் விசித்திரத்தன்மையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டப்பட்டுள்ளதாகத் மக்கள் தெரிவிக்கின்றனர்.




Post a Comment