மீண்டு மேலெழுகின்றது வெள்ளம் - கடும் எச்சரிக்கை விடுப்பு

 

மீண்டு  மேலெழுகின்றது வெள்ளம் - கடும் எச்சரிக்கை விடுக்கும் சீனா

நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் மீண்டும் பெரும் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உருவான ஏரி தனது கரைகளை உடைத்துக்கொண்டு மீண்டும் வெளியேறுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தப் பகுதியில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட கோரமான திடீர் வெள்ளத்திற்கு மலைப் பனிப்பாறை நதியில் சரிந்து விழுந்ததே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, சீன அரசிற்குச் சொந்தமான சிசிடிவி (ஊஊவுஏ) செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்தத் தடை ஏரியில் தோராயமாக 2.5 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளது. 

நதியின் போக்கை குப்பைகளும் மணலும் தடுத்து இயற்கையாக அணை போன்ற அமைப்பை உருவாக்கும் நீர்நிலையே தடை ஏரி என கூறப்படுகின்றது.


வியாழக்கிழமைக்கும் வார இறுதி நாள்களுக்கும் இடையில் மேலும் மூன்று மில்லியன் கன மீட்டர் தண்ணீர் இந்த ஏரிக்குள் பாயும் என எதிர்பார்க்கப்படுவதால், 'உடைப்புக்கான அதிக ஆபத்து' இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

சோச்சென் கோலா மற்றும் புரேபுத் சாங்போ நதிகள் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ள இந்தத் தடை ஏரி ஏற்கனவே நிரம்பி வழியத் தொடங்கிவிட்டதாக சீனாவின் நீர் வள முகாமைத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் அப்பகுதியில் தொடர்ச்சியாக பலத்த மழையும் பெய்து வருகின்றமை வெள்ள அனர்த்த்திற்கு ஏதுவான காரணியாக அமைந்துள்ளது என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment