அனுராதபுரம் – கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 56 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் இடம்பெற்ற விருந்தொன்றின்போது, அயல்வீட்டில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு முற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை அயல்வீட்டு நபர் கூரிய ஆயுதத்தால் குறித்த நபரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
