வாகனம் செலுத்தும் போது காணொளிகளை பார்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது பாதுகாப்பு தொடர்பான விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட பொலிஸார், "சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்தை ஏற்படுத்தும்" என சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகனம் ஓட்டும் போது காணொளி பார்பதால் வீதியிலிருந்து கவனம் திசை திருப்பப்படும். அதனால் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் நேரத்தை இழக்க நேரிடும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிகள் தங்கள் உயிரை மட்டுமன்றி பயணிகள் மற்றும் பாதசாரிகளின் உயிர்களுக்கும் பொறுப்பானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
"இழந்த உயிரை மீண்டும் பெற முடியாது" என வீதியை பயன்படுத்தும் அனைவரும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
