தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து-ஒருவர் உடல் கருகி பலி

 

கந்தகெட்டிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளுவ மெட்டிஹக்க பகுதியில் உள்ள தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நபர் ஒருவர் நேற்று (30) இரவு உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கந்தகெட்டிய பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராவார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடலம் தற்போது காவல்துறை பாதுகாப்புடன் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கந்தகெட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment