“நானே நினைக்கவில்லை!” – நயன்தாராவுடன் நடிப்பது குறித்து கவின் வெளிப்படைப் பேச்சு!

சின்னத்திரை நடிகராக தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின்.


இவர் தற்போது நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள ‘Hi’ திரைப்படம் வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதி வெளியாகவுள்ளது.


நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிப்பது குறித்து பலரும் “ஒருநாள் கூட நயன்தாராவுடன் நடிப்பார் என்று நினைத்திருக்க மாட்டார்” எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு பதிலளித்த கவின் “கண்டிப்பாக நானே நினைக்கவில்லை. அது தனது பட்டியலில் இல்லை” என தெரிவித்துள்ளார்.


கவினின் இந்தப் பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Post a Comment