வாகன விபத்து தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

 

இத்தனை பேர் சாவா 


வருடத்தின் ஆரம்பம் முதல் நேற்று (20) வரை 1,654  பாரிய வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.

இந்த வீதி விபத்துகள் தொடர்பான முக்கிய தகவல்கள்:
• உயிரிழப்புகள்: கொடூரமான வீதி விபத்துக்கள் காரணமாக 1,749 பேர் உயிரிழந்துள்ளனர்.
• காயமடைந்தவர்கள்:
• பலத்த காயமடைந்தவர்கள்: 4,556 பேர்
• பகுதியளவில் காயமடைந்தவர்கள்: 7,295 பேர்
• சொத்து சேதங்கள்: 3,232
உயிரிழந்தவர்களின் விபரம்:
• பாதசாரிகள்: 576
• மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்: 617
• பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள்: 122
• மிதிவண்டி ஓட்டுநர்கள்: 119
• சாரதிகள்: 139
• பயணிகள்: 173


Post a Comment