தலைமன்னாரில் இந்திய மீனவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படை

 


தலைமன்னார் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் படகும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்தது.

சர்வதேச கடல் எல்லையை மீறி, சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் தரைமட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னாருக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment