கலகொடஅத்தே ஞானசார தேரரின் விகாரையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் சற்று முன்னர் பதிவானதாகத் தமிழ் பிளஸ் செய்திப் பிரிவின் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவல்துறை மெய்பாதுகாவலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🛑புதிய அப்டேட்🛑
கொழும்பில் துப்பாக்கிச் சூடு: வெலிக்கடை பொலிஸ் அதிகாரி தற்கொலை
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர், T-56 ரக துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (2026.08.20) மாலை 5.30 மணியளவில் ராஜகிரிய, நாவல வீதி, இலக்கம் 615 இல் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்ம ராஜிக விகாரையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விகாரையில் தங்கியிருக்கும் கல்யானவங்ச தரப்பின் வணக்கத்திற்குரிய கலபொடஅத்தே ஞானசார தேரரின் பாதுகாப்புப் பணியில், காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலான நேரப் பிரிவில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரி தொடர்பான தகவல்கள்:
* முழுப் பெயர்: அணில் உதயசிரி குணவர்தன
* பதவி / இலக்கம்: பொலிஸ் கொன்ஸ்டபிள் (PC 78981)
* நிரந்தர முகவரி: இல. 54/பி, அபயபுர, அனுராதபுரம்
* தேசிய அடையாள அட்டை இலக்கம்: 902250298 V
* பொலிஸ் அடையாள அட்டை இலக்கம்: 85004
* குறித்த பொலிஸ் நிலையத்தில் இணைந்த திகதி: 2026.03.29
* குடும்ப நிலை: திருமணமானவர்
* மனைவியின் பெயர்: சி.எம்.டபிள்யூ.பி. ஹேரத்
இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

