ஓகஸ்ட் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பு

 

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதன்படி அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 9 லட்சத்து 99 ஆயிரத்து 502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் வைப்பிலிடப்படும்.

அதேபோல இரண்டாம் கட்டத்தின் கீழ் 2 லட்சத்து 12 ஆயிரத்து 955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே தகுதியான பயனாளிகள் இன்று முதல் தங்கள் வங்கி கணக்குகளை சரிபார்க்குமாறு நலன்புரி நன்மைகள் சபை கேட்டுகொண்டுள்ளது.


Post a Comment