இலங்கையில் குறையுமா எரிபொருளின் விலை -சற்று முன் வெளியான தகவல்

 

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 7,170 கோடி ரூபாய் நிவாரணப் பொதியிலிருந்து, அதிகூடிய நிதி ஒதுக்கீடான 5,280 கோடி ரூபாய் எரிபொருள்; துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிதிக் குழுவில் தகவல்கள் வெளியாகின.

தரையிறக்கும் செலவு அதிகரித்துள்ளதன் காரணமாக எரிபொருள் விற்பனையின்போது ஏற்படக்கூடிய நஷ்டம் மற்றும் அதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நிவாரணம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் நிதிக் குழுவுக்கு அறிவித்தனர்.

மத்திய கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான இலக்கம் 03 உத்தேச பரிபூரக மதிப்பீட்டிலிருந்து ஒதுக்கப்பட்ட 7,170 கோடி ரூபாய் நிவாரணப் பொதிக்கு அரசாங்க நிதிக் குழுவின் அனுமதி கிடைத்தது.

நிவாரணப் பொதியின் கீழ் பல்வேறு துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் அந்தப் பணம் பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அரசாங்க நிதிக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மற்றும் உரிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


Post a Comment