நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு அவசர உதவிகள், ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அவசர உதவி தேவைப்படும் இலங்கைப் பிரஜைகள் காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணிநேர அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுளு;ளது.
977 985 104 8653 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கும், ளடநஅடி.மயவாஅயனெரளூஅகய.பழஎ.டம என்ற மின் அஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சின் பொது இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் ஜெனரலும் ஊடகப்பேச்சாளருமான துஷார ரோடிரிகோவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவரின் கையடக்க தொலைபேசி மற்றும் வட்ஸ்ஏப் இலக்கமாக 070 788 7778 இற்கும் 0112 473 899 என்ற தொலை நகல் இலக்கத்திற்கும் தொடர்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு மத்தியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், நேபாளத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை பாதுகாப்பாக இருக்குமாறும், உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
