பொலிஸ் நற்சான்றிதல் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

 


காவல்துறை நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பான தற்காலிக நடைமுறை தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இலங்கை காவல்துறை நற்சான்றிதழ் பிரிவின் கணினி தரவு முறைமையில் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தடை காரணமாக, விண்ணப்பதாரர்களுக்காக பின்வரும் தற்காலிக நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக விண்ணப்ப நடைமுறை

அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.police.lk  இல் சென்று, 'Download Application' என்பதை அழுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு  ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

விண்ணப்பங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

மின்னஞ்சல்

clear.application@police.gov.lk

கட்டணம் இல்லை: 

இந்தத் தற்காலிக கட்டமைப்பில்; எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

முக்கியமான அறிவுறுத்தல்கள்

இணையவழி முறைமை மீள இயங்கும்போது: கணினி முறைமை வழமைக்குத் திரும்பியவுடன், இந்தத் தற்காலிக முறை மூலம் விண்ணப்பித்த அனைவரும் உரிய கட்டணத்தைச் செலுத்தி, மீளவும் ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நற்சான்றிதங்களுக்கான குறிப்பு எண்கள் (Reference Numbers) ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விண்ணப்பதாரர்களின் குறிப்பு எண்கள் காவல்துறை வலைத்தளத்தில் வெளியிடப்படும்.

பெற்றுக்கொள்ளும் இடம் 

குறிப்பு எண்கள் வெளியிடப்பட்டவர்கள், பத்தரமுல்ல, சுஹுறுபாய கட்டடத்தின் 17 ஆம் மாடியில் அமைந்துள்ள காவல்துறை நற்சான்றிதழ் பிரிவிற்குச் சென்று சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

விடுமுறை நாட்களிலும் சேவைகள் 

சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பிற விண்ணப்பங்கள் 

குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, கணினி முறைமை முழுமையாக மீள இயக்கப்பட்ட பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

குறிப்பு 

முறைமையை விரைவில் மீள இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அது தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும்.

Post a Comment