சிறுமி ஒருவரை இன்று காலை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி - சிறுமி தொடர்பில் விபரம் கோரும் (கண்டி) வத்தேகம பொலிஸார்
இன்று காலை வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதிவாகி உள்ளது.
தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சிறுமி பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றார்கள்.
Wattegama Police Station
0812 476 222
காலை 6:15 மணியளவில் குறித்த பகுதிக்கு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சிறுமியை அங்கு இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அச்சிறுமியின் அழுகைக் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பிரதேசவாசிகள், உடனடியாகப் பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்ததும் விரைந்து செயல்பட்ட வத்துகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுமியைத் தங்களது பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்தனர்.
முதற்கட்டமாக வத்துகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பச்சை நிற முச்சக்கர வண்டியிலேயே சிறுமி கொண்டுவரப்பட்டதாகப் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
பெற்றோரே இவரைக் கைவிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் வேட்டையைச் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், அச்சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்படுவதால், இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
