இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியாவின் துடுப்பாட்டவீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் சுதர்சன் குழாமில் பெயரிடப்பட்டபோதும் அவர் உடற்றகுதியை நிரூபிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் சுதர்சனுக்கு பெருவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாகக் குணமடையாத நிலையிலேயே அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
சுதர்சனை அணியில் பயிற்சிப் போட்டியில் சதம் பெற்ற தேவ்டுட் படிக்கல் பிரதியிடுவாரென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், குழாமில் சுதர்சனை யார் பிரதியிடுவாரென அறிவிக்கப்படவில்லை.
