Posts

ஜஃப்னா கிங்ஸ் அணியில் மாற்றம் - புதிய பெயர் அறிவிப்பு!


லங்கா பிரீமியர் லீக் தொடரின் Jaffna kings அணியை ஸ்டாக்ஹோமை தளமாகக் கொண்ட 'ஆங்கர் ஸ்போர்ட்ஸ் ஏபி'  என்ற சர்வதேச விளையாட்டு உரிமையாளர் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகீர் கான் இந்நிறுவனத்தின் இணை உரிமையாளராக காணப்படுகின்றார்.

இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, 'ஜாப்னா கிங்ஸ்' என அழைக்கப்பட்ட இந்த அணி, புதிய உரிமையின் கீழ் அதிகாரப்பூர்வமாக 'ஆங்கர் ஜாப்னா கிங்ஸ்'  என மறுபெயரிடப்பட்டுள்ளது.  

எங்கர் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் நாகேந்திர சித்தௌதம் மற்றும் ஷகீர் கான் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது முதலீட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த அணியைக் கைப்பற்றியுள்ளனர். 

எங்கர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே பெல்ஜியத்தின் 'ஆண்ட்வெர்ப் ஆங்கர்ஸ்' மற்றும் கனடாவின் சூப்பர் 60 லீக்கின் 'வென்கூவர் ஆங்கர்ஸ்' அணிகளையும் சொந்தமாகக் கொண்டுள்ளது.  

தற்போது நடைபெற்று வரும் எல்.பி.எல். தொடரின் புள்ளிப்பட்டியலில் யாழ்ப்பாண அணி முதல் இரண்டு இடங்களுக்குள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment