சர்வதேசத்தை கதிகலங்க செய்த மற்றுமொருவர் கைது - கடத்தல்காரர்களால் பிரபல்யம் அடையும் இலங்கை


துபாய் பாதுகாப்புப் படையினரால் ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளதாக மே மாதத்தில் முதன்முதலில் தகவல்கள் வெளியாகின. 


எனினும், அவரது கைது தொடர்பில் அப்போது அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை இலங்கை அதிகாரிகள் பெற்றிருக்கவில்லை.

இவர் ஈரானிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்க அதிகாரிகளாலும் தேடப்பட்டு வருவதாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

துபாயில் வசிக்கும் போது அவர் தன்னை ஒரு கோடீஸ்வர வணிகராகக் காட்டிக் கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இலங்கைக்குப் போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய ஐந்து கடத்தல்காரர்களில் ஷிரான் பாசிக்கும் ஒருவர் என தற்போது நம்பப்படுகிறது.


Post a Comment