திடீரென குறைந்த வெப்பநிலை - மற்ற பகுதிகளில் நிலை என்ன?


இலங்கையின் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக நுவரெலியாவில் 14.6°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் நாளாந்த வெப்பநிலை அறிக்கை தெரிவித்துள்ளது.

நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது மத்திய மலைநாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் குளிரான காலநிலை நிலவியுள்ளது. 

அதன்படி, பண்டாரவளையில் 19.4°C உம், பதுளையில் 21.7°C உம் பதிவாகியுள்ளன. கதுடுகஸ்தோட்டையில் குறைந்தபட்ச வெப்பநிலை 22.8°C ஆகப் புதன்கிழமை  (26) அன்று பதிவாகியுள்ளது.

இதற்கு மாறாக, பல வடக்குப், கிழக்கு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஒப்பிட்டளவில் கூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் அதிகூடிய குறைந்தபட்ச வெப்பநிலையாகப் பொலன்னறுவையில் 27.5°C பதிவாகியுள்ளது. யாழ்ப்பணம், முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய ஒவ்வொரு பகுதியிலும் 27.2°C உம், திருகோணமலை மற்றும் இரத்மலானையில் 27.1°C உம் பதிவாகியுள்ளன. மன்னாரில் 27.0°C பதிவாகியுள்ளது.

கொழும்பில் குறைந்தபட்ச வெப்பநிலை 26.8°C ஆகவும், அனுராதபுரத்தில் 26.7°C ஆகவும், மட்டக்களப்பில் 26.5°C ஆகவும் பதிவாகியுள்ளன. வவுனியா மற்றும் களுத்துறையில் முறையே 26.4°C மற்றும் 26.2°C பதிவாகியுள்ளன.

ஏனைய பகுதிகளில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலைக் விவரங்கள் பின்வருமாறு:

பொத்துவில்: 25.6°C

மத்தள: 25.4°C

மகா இலுப்பள்ளம: 25.2°C

மொனராகலை: 25.1°C

காலி: 24.9°C

ஹம்பாந்தோட்டை: 24.8°C

குருநாகல்: 24.5°C

இரத்தினபுரி: 24.4°C

Post a Comment