சீகிரி யாவில் மறைந்திருந்த சீனர்கள் - சுற்றி வளைத்த போலீசார்

 

சீகிரியவில் தலைமறைவாகியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன பிரஜை ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகளை கொழும்பு குற்றப் பிரிவு (CCD) சீகிரிய பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் சீனப் பிரஜைகள் குழுவொன்றிற்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஒரு சீனப் பிரஜை பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

 பின்னர் அவரது சடலம் எஹெலியகொட பகுதியில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கொழும்பு குற்றப் பிரிவு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வந்தது.

இதற்கமைய, சீகிரிய பகுதியில் தலைமறைவாகியிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட இந்த இரு சீனப் பிரஜைகளிடமும் கொழும்பு குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment