மாணவர்கள் சென்ற பேருந்து சுற்றுலா பயணி மீது ஏறியது நுவரெலியாவில் சோகம்
நுவரெலியா, ஹக்கலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் பதிவாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பாதசாரி ஒருவர் வீதியை கடக்க முயற்சித்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரியிலிருந்து ஹக்கலை பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மாணர்களுடன் கல்விச்சுற்றுலாவிற்கு வருகை தந்திருந்த பேருந்து ஒன்றே நபர் ஒருவர் மீது மோதுண்டுள்ளது.
குறித்த பேருந்து சிசு சரிய என போலி பெயர்பலகையுடன் இதுவரை காலமும் சேவையில் ஈடுபட்ட நிலையில், பேருந்து வீதியில் பயணிப்பதற்கான தகுதிகள் இல்லாத நிலையில் சேவையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
