வவுனியாவில் மூலிகை பற்பசை என்ற பெயரில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த மூலிகை பேஸ்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் அறிய கிடைத்துள்ளது.
வவுனியா காவல்துறைத் தலைமையகப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஒய்.எஸ். ரத்நாயக்க தலைமையிலான காவல்துறை குழுவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இந்த போதை பொருள் சந்தைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த பற்பசையில் உண்மையில் கஞ்சா கலவை செய்யப்பட்டுள்ளதா என்பதனை கண்டறிய இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
