ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கடவல பகுதியில் லொறி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று மாலையில் இடம்பெற்றதாக கினிகத்தேன பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் ஒன்றும் ஹட்டனில் இருந்து கினிகத்தேக பகுதி நோக்கி சென்ற லொறி ஒன்றும் வளைவொன்றில் நேருக்கு நேர் மோதுண்டது.

இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேமலதிக  விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment