இரகசியமாக தூக்குமேடையை தயார் செய்யும் அரசாங்கம்-வெளியான அதிர்ச்சி தகவல்

 

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பயனாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பாகத் தற்போது பல தரப்பினராலும் பேசப்பட்டு வருகிறது. போதைப்பொருளுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நேற்று முன்தினம் (11) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார். போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும், அது ஒரு பரிந்துரை மாத்திரமே எனவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கு மேடையொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன், தூக்கிலிடுவதற்கு அலுகோசு (நிறைபேணி) எனப்படும் இருவரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தினால் நாட்டில் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மரண தண்டனை வழங்குவது குறித்த பரிந்துரை தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


 

Post a Comment