யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு மாநகரசபை ஆணையாளரும் ஏனைய அரசாங்க அதிகாரிகளும் தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டி, மாநகரசபை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (11) அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையிலுள்ள ITAK> NPP> EPDP> TNPF> DTNA> UNP மற்றும் SJB ஆகிய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தினர்.அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தலையிட்டு முடக்க முற்படுகின்றனர்.
ஆகிய காரணங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
