தனியார் துறை ஊழியர்களும் இனி இணையவழி (Online) முறையில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பருவச்சீட்டு முறையைத் தொடர்ந்துஇ இந்த வசதி தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
பல தசாப்தங்களாக மாற்றமின்றி காணப்பட்ட சிக்கலான நடைமுறைகளுக்கு மாற்றாக இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பருவச்சீட்டைப் பெறுவதற்காக பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்ததுடன்இ தமது பணியிடங்களிலிருந்து கடிதங்களையும் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
புதிய இணையவழி முறை நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
