நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

 

81 000 பேர் தாகத்தில் தவிக்கின்றனர்

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக 81,000-க்கும் அதிகமானோர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இப்பகுதி மக்களுக்குப் பீப்பாய்களில் குடிநீர் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வறண்ட காலநிலையினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் மொனராகலை ஆகும்.

இதற்கமைய, மொனராகலை மாவட்டத்தில் 33,023 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28,523 பேரும், அம்பாறை மாவட்டத்தில்  8,783 பேரும், பதுளை மாவட்டத்தில்  7,876 பேரும் மொத்தமாக 81,865 பேர் தற்போது இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment