இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகம்

 

தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக அடுத்த சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரத்ன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டின் எஞ்சியுள்ள மாதங்களுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்

"நாங்கள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம். இந்த வருடத்திற்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடும் நிலையை அடைவோம். அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்தளவில் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் சுமார் 2 வருடங்களுக்குள் நாட்டின் 17 மில்லியன் மக்களையும் பழைய அடையாள அட்டைகளில் இருந்து புதிய டிஜிட்டல் முறைமைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

Post a Comment