ஆட்டோ சாரதிகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

 

முச்சக்கர வண்டித் தொழிலை முறைப்படி ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இதன்போது, முச்சக்கர வண்டி ஓட்டுநருக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்தி, இத்துறையை ஒரு சரியான அமைப்பின் கீழ் ஒழுங்குபடுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment