களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அல்லது விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை உறுதிப்படுத்தக்கூடிய முறையான ஆவணங்கள் அல்லது பட்டியல்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தக சமூகத்திற்கு அறிவித்துள்ளது.
அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள 83 ஆம் இலக்கக் கட்டளையின் கீழ், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், வழங்குநர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகளுக்கும் இந்தச் சட்டம் 2022 ஏப்ரல் 27 முதல் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு பில்லில் ரூபாபய் பெறுமதியில் களஞ்சித்தில் காணப்படுமாயின், வழங்குநரின் பெயர் மற்றும் முகவரி, கொள்வனவு செய்யப்பட்ட திகதி மற்றும் கொள்வனவு விலை, பொருளின் வகை, அளவு மற்றும் பொருந்தக்கூடிய தொகுதி எண் ஆகியன கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகளின் போது இந்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படுவதுடன், சட்டத்தை மீறும் சந்தர்ப்பங்களில் பொருட்களை வழக்குப் பொருட்களாகப் பொறுப்பேற்று நீதிமன்றில் ஒப்படைக்கவும்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அதிகார சபை வலியுறுத்துகிறது
