கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று வஸ்கடுவ - காலி வீதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனம் எதிரே உள்ள பாதைக்கு மாறி, மூன்று பாதசாரிகள் மீது மோதியதுடன், இரண்டு வீதியோர எல்லைத் கம்பங்களிலும்; மோதி வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சாரதி நித்திரை கொண்டமையினால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதியை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
