கொழும்பிலும் விபத்து-பெண் பலி

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஞ்சிக்கடை சந்திக்கு அருகில், துறைமுகப் பகுதியிலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றின் முன் பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் டிப்பருடன் மோதி படுகாயமடைந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்.

டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர். 


Post a Comment