அம்பாறையை கதிகலங்க வைத்த விபத்து-சம்பவ இடத்திலே குடும்பஸ்தர் பலி

 

அம்பாறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீரன் கெட்டகொட சந்தைக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் வீரன் கெட்டகொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.

வேனில் பயணித்த இருவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment