இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில நடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது
