இலங்கையின் நான்கு மாகாணங்களுக்கு உட்பட்ட பொது போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களில் 10 வீதமானோர் கடமையின் போது மது போதையில் காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசியப் போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
மேல், தெற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இதுவரை நடத்தப்பட்ட எழுமாறான போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகத் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருளின் செல்வாக்கின் கீழ் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களைச் சோதிக்கும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா குறிப்பிட்டார்.
இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பல தடவைகள் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
