ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பாக, வவுனியாவைச் சேர்ந்த வசிப்பவர் ஒருவர் வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இவர் நேற்று (24) ஆம் திகதி நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
வவுணதீவு இராணுவப் புலனாய்வு பிரிவின் பொறுப்பில் இருந்த குற்றப் புலனாய்வுத் திணைகளத்திடம் ஒப்படைக்கப்பட்ட புலனாய்வு துறை அறிக்கைகளில் உள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த நபரிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என குற்றப் புலனாய்வுத் திணைகளம் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுமார் ஒரு மணி நேரம் வழங்கப்பட்ட இந்த வாக்குமூலம் முத்திரையிடப்பட்டு பெட்டகம் ஒன்றில் பொதியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
